தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ராஜினாமா கடிதத்துடன் விதான் சவுதா வந்த காங்., - எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு!

ராஜினாமா கடிதத்துடன் விதான் சவுதா வந்த காங்., - எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு!

ராஜினாமா கடிதத்துடன் விதான் சவுதா வந்த காங்., - எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு!


UPDATED : நவ 24, 2026 06:10 AM

ADDED : நவ 23, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 06:10 AM ADDED : நவ 23, 2026 10:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன் மாவட்டத்தில், கடந்த வாரம் யானை தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காட்டு யானைகளை பிடிப்பதற்கு ஏழு கும்கிகள் கொண்டு வரப்பட்டன. தேடுதல் வேட்டை தற்போதும் நடக்கிறது. அதுபோல, சிக்கமகளூரு என்.ஆர்., புரா தாலுகாவில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.

இந்த சூழ்நிலையில், 'ஹாசனில் சுற்றித்திரியும் 56 யானைகள், சிக்கமகளூருரில் உள்ள பத்ரா வனவிலங்குகள் சரணாலயத்திற்கு விரட்டப்படும்' என, ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவலிங்கே கவுடா தெரிவித்தார்.

3 பேர் எதிர்ப்பு



பத்ராவுக்கு யானைகளை விரட்டுவதற்கு, சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களான மூடிகெரே - நயனா, சிருங்கேரி - ராஜேகவுடா, சிக்கமகளூரு - தம்மையா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் மூவரும் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தனர்.

அப்போது, நயனா மட்டும், தன் ராஜினாமா கடிதத்தை காண்பித்து ஆவேசமாக பேசினார். 'பத்ராவுக்கு யானைகள் விரட்டப்படுவதை நிறுத்தா விட்டால் 23ம் தேதி காலை ராஜினாமா செய்வேன்' எனவும் அறிவித்தார்.

இதன்படி, பெங்களூரு விதான் சவுதாவுக்கு நேற்று காலை ராஜினாமா கடிதத்துடன் நயனா வந்தார். சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீலின் அலுவலகத்துக்கு சென்றார். பாட்டீல் இல்லாததால், அவரது தனி செயலர் அசோக் மிஸ்ரியின் அலுவலகத்துக்கு சென்றார். ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார்.

தனி செயலரால் ராஜினாமா கடிதத்தை பெற முடியாது என்றும், சபாநாயகரிடமே ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் அசோக் அறிவுறுத்தினார். இதனால், அங்கிருந்து நயனா கோபமாக வெளியேறினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

ஹாசனில் இருந்து பத்ராவுக்கு யானைகளை விரட்டுவது குறித்து, சிக்கமகளூரு எம்.எல்.ஏ.,க்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில் மாநில அரசு எங்களிடம் ஆலோசனை கூட நடத்தவில்லை. இதனால், மூடிகெரே தொகுதியில் யானைகளால் ஏற்படும் இழப்புகள், உயிர் பலிக்கு என்னால் பொறுப்பேற்க முடியாது.

கடும் பாதிப்பு



இதுபோன்ற விஷயங்களில் எம்.எல்.ஏ.,க்களிடம் கருத்து கேட்பது முக்கியம். பத்ராவுக்கு யானைகள் துரத்தப்படுவதால் மூடிகெரே, சிக்கமகளூரு, சிருங்கேரி, தரிகெரே ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். எனக்கு ஓட்டளித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு. எனக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த மக்களை பாதுகாக்க முடியாவிட்டால், எம்.எல்.ஏ.,வாக இருப்பதில் என்ன பயன்.

இதனாலேயே, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்வந்தேன். சபாநாயகர் இல்லாததால் கடிதத்தை சமர்ப்பிக்க முடியவில்லை. நாளை காலை ராஜினாமா கடிதத்துடன் வருவேன்.

ஹாசனில் வசிக்கும் மக்களின் உயிருக்கு மட்டும் தான் மதிப்பா. சிக்கமகளூரு, மூடிகெரே, சிருங்கேரியில் வசிக்கும் மக்களின் உயிருக்கு மதிப்பில்லையா.

காங்கிரஸ் அரசிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு மதிப்பில்லை. பத்ராவுக்கு யானைகள் விரட்டுவதை நிறுத்தக்கோரி வன அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்விவகாரத்தில் வனத்துறை, மாநில அரசை கடுமையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

* எனக்கு பங்கில்லை

நயனா எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கூறுவது, அவரது தனிப்பட்ட உணர்வு. அவர், எனது பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. எனவே, அவரை பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். இந்த விஷயத்தில் அரசியல் செய்வது நல்லதல்ல. பத்ராவுக்கு யானைகளை விரட்டுவதில், வன அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்றி வருகிறோம். இதில், என்னுடைய பங்கு எதுவுமில்லை.

- சிவலிங்கே கவுடா, ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர்.

* ராஜினாமா தீர்வாகாது

சிக்கமகளூரு, ஹாசன், குடகு உள்ளிட்ட மலைநாடு பகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் எதிர்கொளும் பிரச்னைகளில் யானைகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் முக்கியமானது. இந்த பிரச்னையை வனத்துறை கண்டு கொள்ளாமல் உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களான நயனா, தம்மையா, ராஜேகவுடா ஆகியோரின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும், அவர்கள் பதவி விலகும் முடிவை நான் ஆதரிக்கவில்லை. எந்த பிரச்னைக்கும் பதவியை ராஜினாமா செய்வது தீர்வாகாது.

- பொன்னண்ணா, முதல்வரின் அரசியல் ஆலோசகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us