UPDATED : நவ 24, 2026 12:00 AM
ADDED : நவ 23, 2026 11:06 PM

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோருக்கு, கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வர் நேற்று எழுதிய கடிதம்:
கர்நாடகாவில், வறட்சியால் மொத்த இழப்பு 62 ஆயிரத்து 481 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசி ய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, முதற்கட்டமாக மத்திய அரசு 22,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று, கடந்த 2ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன் ஆனால், பதில் இல்லை. விவசாயிகளுக்கு உதவும் வகையில் கர்நாடக அரசு, தலா 5,000 ரூபாய் இழப்பீ டு வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும் மாநிலத்தில் நிலவும் வறட்சி தீவிரம், விவசாய துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக நிதி விடுவிக்க வேண்டும்.
மத்திய அரசிடம் பல முறை உதவி கேட்கிறோம். ஆனால் நியாயமான கோரிக்கைளுக்கு கூட மத்திய அரசு உதவவில்லை. இயற்கை பேரிடர்களுக்கு அரசியல் எல்லைகள், சித்தாந்த வேறுபாடுகள் கிடையாது.
வறட்சி போன்ற பேரிடர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதுவே கூட்டாட்சி அமைப்பின் உண்மையான பலம். கர்நாடகாவில் நிலவும் வறட்சி குறித்து தெளிவாக எடுத்து கூற, உங்களை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கி கொடுங்கள்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
