/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஈ.டி., விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் காங்., - எம்.எல்.ஏ.,
/
ஈ.டி., விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் காங்., - எம்.எல்.ஏ.,
ஈ.டி., விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் காங்., - எம்.எல்.ஏ.,
ஈ.டி., விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் காங்., - எம்.எல்.ஏ.,
ADDED : ஆக 27, 2025 10:54 PM

பெங்களூரு: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான, சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, 50. கோவாவில் சூதாட்ட விடுதிகளை நடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து, வரி ஏய்ப்பு செய்தார்.
சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டார். அவரை கடந்த 23ம் தேதி ஈ.டி., எனும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பி, நீதிபதி சையத் பி.ரகுமான் உத்தரவிட்டார். பெங்களூரு சாந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து, வீரேந்திர பப்பியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கினர்.
பண பரிமாற்றம், வங்கிக் கணக்கு விபரங்கள் உள்ளிட்டவைகளை கேட்ட போது, அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது ஆடிட்டரிடம் தான் கேட்க வேண்டும் என்று வீரேந்திர பப்பி கூறி உள்ளார்.
அமலாக்கத் துறையினர் கேட்ட பல கேள்விகளுக்கு, பதில் அளிக்காமல் மவுனம் சாதித்து உள்ளார். நேற்று வரை நான்கு நாட்கள் நடந்த விசாரணைக்கு அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மீண்டும் அவரை தங்கள் காவலுக்கு அனுப்பும்படி, அமலாக்கத்துறை சார்பில் கேட்கப்படலாம் என்று தெரிகிறது.