sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 திறமையற்ற அமைச்சர்களை நீக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

/

 திறமையற்ற அமைச்சர்களை நீக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

 திறமையற்ற அமைச்சர்களை நீக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

 திறமையற்ற அமைச்சர்களை நீக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : பிப் 25, 2026 07:31 AM

Google News

ADDED : பிப் 25, 2026 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: 'திறம்பட செயல்படாத அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குங்கள்' என, முதல்வர் சித்தராமையாவை, ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

சரியாக பணி செய்யாத, திறம்பட செயல்படாத அமைச்சர்களால், நான் அதிருப்தி அடைந்து உள்ளேன். அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை. நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், அமைச்சர்களை விட சிறப்பாக பணியாற்றி வருகிறேன். அமைச்சர்கள் சிலர் சரியாக செயல்படவில்லை என்று, முதல்முறை எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று கூடி விவாதித்தோம்.

இதன்பிறகே எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று, கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினோம். நாங்கள் யாரும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல.

இன்னும் இரண்டரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர, இப்போதே சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். சரியாக பணியாற்றாத, திறம்பட செயல்படாத அமைச்சர்களை பதவியில் இருந்து முதல்வர் சித்தராமையா நீக்க வேண்டும். தலைமை மாற்றத்துடன், அமைச்சர்களையும் மாற்ற வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது.

துணை முதல்வர் சிவகுமார் கட்சிக்காக நிறைய தியாகம் செய்து உள்ளார். அவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. தலித் சமூகத்திற்கு முதல்வர் பதவி வழங்குவது குறித்து எழுந்துள்ள கோஷம் பற்றி எனக்கு தெரியாது. என் கடைசி மூச்சு வரை சிவகுமார் முதல்வராக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன்.

இவ்வாறு இக்பால் ஹுசைன் கூறினார்.






      Dinamalar
      Follow us