/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., - எம்.எல்.ஏ.,வின் ரூ.1.32 கோடி சொத்து முடக்கம்
/
காங்., - எம்.எல்.ஏ.,வின் ரூ.1.32 கோடி சொத்து முடக்கம்
காங்., - எம்.எல்.ஏ.,வின் ரூ.1.32 கோடி சொத்து முடக்கம்
காங்., - எம்.எல்.ஏ.,வின் ரூ.1.32 கோடி சொத்து முடக்கம்
ADDED : ஜூலை 18, 2025 11:21 PM

பெங்களூரு: 'கோச்முல்' எனும் கோலார் - சிக்கபல்லாபூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்கும் அமலாக்கத்துறை, மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடாவின் 1.32 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி உள்ளது.
'கோச்முல்' எனும் கோலார் - சிக்கபல்லாபூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர் நஞ்சே கவுடா. இவர் கோலாரின் மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆவார்.
கோச்முலில் பல பணியிடங்களுக்கு, ஆட்களை நியமிக்க தேர்வு நடத்தாமல், நேரடியாக நியமித்ததாக 2023ல் குற்றச்சாட்டு எழுந்தது.
நியமனத்தில் பணம் கைமாறியது பற்றி தெரிந்ததால், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி நஞ்சே கவுடா வீடு, அலுவலகம், கோச்முல் அலுவலகம், இயக்குநர்கள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதற்கு பின், கோச்முல் இரண்டாக பிரிந்து கோமுல், சீமுல் ஆனது.
கோமுலுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், நஞ்சே கவுடா தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். சீமுலுக்கு இன்னும் தேர்தல் நடக்கவில்லை.
இந்நிலையில் கோச்முல்லில் நடந்த முறைகேடு தொடர்பாக, நஞ்சே கவுடாவுக்கு சொந்தமான 1.32 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கடந்த 16ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் கூறி உள்ளது.