/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அயோத்தியில் ராமர் தரிசனம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பரவசம்
/
அயோத்தியில் ராமர் தரிசனம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பரவசம்
அயோத்தியில் ராமர் தரிசனம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பரவசம்
அயோத்தியில் ராமர் தரிசனம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பரவசம்
ADDED : ஏப் 16, 2026 04:00 AM

- நமது நிருபர் -: அமைச்சர் பதவி கேட்டு டில்லி சென்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், அயோத்தி சென்று ராமரை தரிசனம் செய்தனர்.
அமைச்சரவையை மாற்றி அமைத்து, தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும்படி வேண்டுகோள் விடுக்க, காங்கிரசின் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், சில நாட்களுக்கு முன் டில்லி சென்றனர். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர். 'இப்போதைக்கு அமைச்சரவை மாற்றம் இல்லை. ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகளே முக்கியம். அதன்பின் அமைச்சரவை மாற்றம் பற்றி பேசலாம்' என, கூறி கைவிரித்து விட்டார்.
அ தன்பின் சிலர் ஏமாற்றத்துடன், பெங்களூருக்கு திரும்பிவிட்டனர். பலர், மேலிட தலைவர்களை சந்திக்கும் நோக்கில், டில்லியிலேயே தங்கியுள்ளனர். ஜெயசந்திரா, ஹம்பனகவுடா பாதர்லி, சாந்தன கவுடா, அசோக்பட்டன் உட்பட, 15 எம்.எல்.ஏ.,க்கள் நேற்று விமானத்தில் அயோ த்திக்கு சென்றனர். ராமரை தரிசனம் செய்தனர்.
பின் ஜெயசந்திரா அளித்த பேட்டி:
அயோத்திக்கு செல்ல வேண்டும்; ராமரை தரிசனம் செய்ய வேண்டும் என்பது, எங்களின் வாழ்நாள் கனவாக இருந்தது. அது இன்று நனவாகியுள்ளது. அயோத்திக்கும், கர்நாடகாவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. பாலராமர் உருவச்சிலையை செதுக்கியது, கர்நாடக சிற்பி யோகிராஜ். கர்நாடகாவுக்கும், அயோத்திக்கும் இடையே நீண்ட பந்தம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

