sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 அயோத்தி செல்லும் காங்., - எம்.எல்.ஏ.,க்கள்

/

 அயோத்தி செல்லும் காங்., - எம்.எல்.ஏ.,க்கள்

 அயோத்தி செல்லும் காங்., - எம்.எல்.ஏ.,க்கள்

 அயோத்தி செல்லும் காங்., - எம்.எல்.ஏ.,க்கள்


ADDED : ஏப் 15, 2026 03:18 AM

Google News

ADDED : ஏப் 15, 2026 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைச்சரவையை மாற்றி அமைத்து, தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும்படி வேண்டுகோள் விடுக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அசோக் பட்டன், ஜெயசந்திரா, ராகவேந்திரா ஹிட்னாள் உட்பட, 20க்கும் மேற்பட்டோர், டில்லி சென்றுள்ளனர்.

அங்கு காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று சந்தித்து, அமைச்சர் பதவி கேட்டனர். ஆனால் அவர் தெளிவான உறுதி அளிக்கவில்லை. ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பணிகள் முடியட்டும். அதன்பின் அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து, ஆலோசிக்கலாம் என, கூறியதால் எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த பின், சிலர் பெங்களூருக்கு திரும்பிவிட்டனர். மற்ற எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் தங்கியுள்ளனர். இவர்கள் வேணுகோபால், சுர்ஜேவாலாவை சந்திக்க முயற்சிக்கின்றனர்.

இன்று தலைவர்களை சந்திக்க, வாய்ப்பு இல்லாத காரணத்தால், காங்கிரசின் 10 எம்.எல்.ஏ.,க்கள், அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இன்று காலை 8:00 மணிக்கு விமானத்தில், அயோத்தி சென்று, ராமரை தரிசனம் செய்யவுள்ளனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us