தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் போராட்டம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் போராட்டம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் போராட்டம்


UPDATED : அக் 12, 2026 12:00 AM

ADDED : அக் 11, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 12:00 AM ADDED : அக் 11, 2026 10:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: ஓட்டு உரிமையை பாதுகாக்கும் நோக்கில், கர்நாடக காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் டில்லியில் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.

முதல்வர் சிவகுமார் மைசூரில் நேற்று அளித்த பேட்டி:

எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி என்ற போர்வையில் தலித், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் ஓட்டுகளை பறிக்கும் செயல் மனிதாபிமானமற்றது. இது ஜனநாயகம் இல்லை. சர்வாதிகார மனப்பான்மை. இதனை எதிர்த்து போராடு வோம். கர்நாடகாவில் 1 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. முதல்வர் என்ற முறையில் மக்களின் ஓட்டுரிமையை பாதுகாப்பது எனது கடமை.

நாட்டில் ஜனநாயக நிலை உள்ளதா அல்லது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதா என, பிரதமர் பதிலளிக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை, விமானத்தில் வைத்து கைது செய்வது சரியல்ல. நாடு முழுதும் 150க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

டில்லியில் யாரும் கால் வைக்க முடியாதபடி அனைத்து வழிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மக்கள் ஓட்டுரிமையை பாதுகாக்கும் வகையில், கர்நாடக காங்கிரஸ் எம்.பி., – எம்.எல்.ஏ., – எம்.எல்.சி.,க்கள் நாளை (இன்று) டில்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us