/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகருக்கு பதவி துமகூரு காங்கிரசார் கடும் எதிர்ப்பு
/
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகருக்கு பதவி துமகூரு காங்கிரசார் கடும் எதிர்ப்பு
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகருக்கு பதவி துமகூரு காங்கிரசார் கடும் எதிர்ப்பு
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகருக்கு பதவி துமகூரு காங்கிரசார் கடும் எதிர்ப்பு
ADDED : அக் 27, 2025 03:35 AM
துமகூரு: கூட்டுறவு துறை உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு, காங்கிரசில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசின் கூட்டுறவு துறைக்கு உட்பட்டது, யஷஸ்வினி கூட்டுறவு சுகாதார பராமரிப்பு அறக்கட்டளை. இந்த அறக்கட்டளைக்கு புதிதாக 14 உறுப்பினர்களை நியமித்து கடந்த 24 ம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பில், துமகூரின் திப்டூரை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரான டாக்டர் ஸ்ரீதர் குமார் பெயர் இடம் பெற்று உள்ளது. இது காங்கிரசில் எதிர்ப்பை கிளம்பி உள்ளது.
திப்டூர் பகுதி காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகையில், 'ராஜண்ணாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பின், அவரிடம் இருந்த கூட்டுறவு துறை, முதல்வர் சித்தராமையா வசம் உள்ளது.
தற்போது அவரது ஒப்புதலின்படியே, கூட்டுறவு துறை உறுப்பினராக, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
'இது எங்களுக்கு மன உளைச்சலை கொடுத்து உள்ளது. ஸ்ரீதர் குமார் நியமனத்தின் பின்னணியில், திப்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சடாக் ஷரி உள்ளாரா என்பது தெரிய வேண்டும். உறுப்பினர்கள் பட்டியலில் இருக்கும் ஸ்ரீதர் குமார் பெயரை, முதல்வர் நீக்க வேண்டும்' என்றனர்.
கர்நாடகாவில் பொது, அரசு இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, அமைச்சர் பிரியங்க் கார்கே, சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்.
இதனை தொடர்ந்து தனியார் அமைப்புகள், அரசு, பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் கூட்டுறவு துறை உறுப்பினராக, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் நியமிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

