/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குமாரசாமியை காணவில்லை காங்., கிண்டல்
/
குமாரசாமியை காணவில்லை காங்., கிண்டல்
ADDED : மார் 27, 2025 11:05 PM
மாண்டியா: 'மாண்டியா எம்.பி., குமாரசாமி காணாமல் போய்விட்டார். அவரை கண்டுபிடித்து தருவோருக்கு, வெகுமதி அளிக்கப்படும்' என காங்கிரஸ் கிண்டல் அடித்துள்ளது.
மாண்டியா காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாவது:
ஹாசனில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படும் விவசாய கல்லுாரியை, பெங்களூரு விவசாய பல்கலைக்கழக எல்லையில் இருந்து, மாண்டியா விவசாய பல்கலைக்கழக எல்லைக்கு இடம் மாற்ற, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாண்டியாவில் பல்கலைக்கழகம் அமைக்க, குமாரசாமி முட்டுக்கட்டை போடுகிறார். இதற்காக தன் அண்ணன் ரேவண்ணாவை ஏவிவிட்டு, குமாரசாமி தப்பி விட்டார்.
இவர் காணாமல் போய் விட்டார். அவரை கண்டுபிடித்து தரும்படி, அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.