/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் - சிக்கபல்லாப்பூர் கூட்டுறவு வங்கி தேர்தல் தலைவர் பதவிக்கு காங்கிரசில் வலுக்கும் 'குஸ்தி'
/
கோலார் - சிக்கபல்லாப்பூர் கூட்டுறவு வங்கி தேர்தல் தலைவர் பதவிக்கு காங்கிரசில் வலுக்கும் 'குஸ்தி'
கோலார் - சிக்கபல்லாப்பூர் கூட்டுறவு வங்கி தேர்தல் தலைவர் பதவிக்கு காங்கிரசில் வலுக்கும் 'குஸ்தி'
கோலார் - சிக்கபல்லாப்பூர் கூட்டுறவு வங்கி தேர்தல் தலைவர் பதவிக்கு காங்கிரசில் வலுக்கும் 'குஸ்தி'
ADDED : மே 27, 2025 12:08 AM
கோலார் : கோலார் - சிக்கபல்லாபூர் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தேர்தலில் காங்கிரசில் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தலைவர் பதவிக்கு கோலார் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத்தும், தற்போதைய தலைவர் கோவிந்த கவுடாவும் குஸ்தி போட துவங்கி உள்ளனர்.
கோலார் - சிக்கபல்லாப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநர்கள் தேர்தலில் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மனுத் தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்கவயல் ரூபகலா, பாகேபள்ளி சுப்பாரெட்டி, கொத்துார் மஞ்சுநாத், மாலுார் ரமேஷ், சித்லகட்டா ஏ.நாகராஜ், மஞ்சேனஹள்ளி ஹனுமே கவுடா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 12 இடங்களுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. அன்டறய தினமே ஓட்டு எண்ணிக்கை.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் முன்னாள் பா.ஜ., - எம்.பி., முனிசாமியின் வெற்றிக்கு அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமாரின் ஆதரவாளரான கொத்துார் மஞ்சுநாத் பாடுபட்டார். இதற்கு கைமாறாக, தனக்கு உதவி செய்யுமாறு, முனிசாமியிடம் கொத்துார் மஞ்சுநாத் ரகசிய பேச்சு நடத்தினார்.
மனு வாபஸ்
இதை தொடர்ந்து, மாவட்ட விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கத்தேர்தலில் மனுத் தாக்கல் செய்திருந்த பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கியின் மகன் பிரவீன், வேட்புமனு வாபஸ் பெற வைத்தனர்.
இதனால், காங்கிரசின் கொத்துார் மஞ்சுநாத் போட்டியின்றி தேர்வானார். இதனால் பா.ஜ., வட்டாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில், 1996 முதல் தலைவராக பதவி வகித்தவர் கோவிந்த கவுடா. இவர் தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்ற தீவிரம் காண்பித்து வருகிறார். ஆனால், முதல்வர் சித்தராமையா, முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், மாலுார் நஞ்சேகவுடா, கொத்துார் மஞ்சுநாத் ஆகியோர் கோவிந்தகவுடாவுக்கு எதிராக உள்ளனர்.
இவரது சங்கத்தில், கோவிந்த கவுடாவை தோற்கடிக்க, மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடாவின் தீவிர ஆதரவாளரான சீனிவாசை களத்தில் இறக்கி உள்ளனர். இதற்காக தன் ஆதரவாளர்களை 'சொகுசு சுற்றுலா'வுக்கு வழி அனுப்பி வைத்துள்ளார்.
இதே நேரத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆதரவில் கோவிந்த கவுடாவை வெற்றி பெற வைக்கவும் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
யாருக்கு யார்?
மொத்தத்தில் போட்டியின்றி தேர்வானவர்களில் மூன்று பேர் ஒரு அணியாகவும்; அடுத்த மூன்று பேர் மற்றொரு அணியாகவும் உள்ளனர். தேர்தலை சந்தித்து உள்ள 12 பேரில் மெஜாரிட்டி நபர்கள், எந்த பக்கம் சாய்கின்றனரோ, அந்த பக்கத்தில் தான், தலைவர் பதவி கிடைக்கும். இந்த தேர்தல், கோலார் மாவட்டத்தில் மட்டுமல்ல, மாநில காங்கிரசிலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
தலைவர் பதவிக்கு ஒரு அணியில் கோவிந்த கவுடா அல்லது ரூபகலாவும்; மற்றொரு அணியில் கொத்துார் மஞ்சுநாத்தும் வரிந்து கட்டி உள்ளனர். இரு தரப்பினரும் வேண்டாம் என விரும்புவோர், சுப்பா ரெட்டிக்கு கொடி துாக்குகின்றனர்.
காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.,வோ, ம.ஜ.த.,வோ போட்டியில் இல்லை. ஆயினும் காங்கிரசுக்குள் கடும் பூசல் நிலவுகிறது.