/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கோமுல்' இயக்குநர் பதவிக்கு தேர்தல் காங்கிரஸ் 9; தே.ஜ., கூட்டணி 4ல் வெற்றி
/
'கோமுல்' இயக்குநர் பதவிக்கு தேர்தல் காங்கிரஸ் 9; தே.ஜ., கூட்டணி 4ல் வெற்றி
'கோமுல்' இயக்குநர் பதவிக்கு தேர்தல் காங்கிரஸ் 9; தே.ஜ., கூட்டணி 4ல் வெற்றி
'கோமுல்' இயக்குநர் பதவிக்கு தேர்தல் காங்கிரஸ் 9; தே.ஜ., கூட்டணி 4ல் வெற்றி
ADDED : ஜூன் 26, 2025 06:52 AM
கோலார் : 'கோமுல்' என்ற கோலார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 13 இயக்குநர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்பது பேரும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவாளர்கள் நான்கு பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
மாலுார் டேக்கல் பகுதியின் -இயக்குநராக மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 12 பதவிகளுக்கு இயக்குநர்களை தேர்ந்தெடுக்க, கோலார் பெண்கள் முதல்நிலைக் கல்லுாரியில் 12 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று காலை 9:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 4:00 மணி வரை நடந்தது. தேர்தலில் ஓட்டளிக்க 855 பேருக்கு ஓட்டுரிமை இருந்தது. 829 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். மாலை 5:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இயக்குநர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்பது பேரும் -தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவாளர்கள் நான்கு பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள் விபரம்:
காங்கிரஸ்
கோலார் வேம்கல்: பி.ரமேஷ்
மாலுார் கசபா: எம்.என்.சீனிவாஸ்
சீனிவாசப்பூர் அட்டகல்-: கே.கே.மஞ்சுநாத்
சீனிவாசப்பூர் எல்டூர்-: ஹனுமேஷ்.எஸ்
பங்கார்பேட்டை: எஸ்.என்.நாராயணசாமி-எம்.எல்.ஏ.,
தங்கவயல்: ஜெயசிம்மா கிருஷ்ணப்பா
கோலார் மாவட்ட பெண் வடக்கு: மஹாலட்சுமி
கோலார் மாவட்ட பெண் தெற்கு: காந்தம்மா
தேசிய ஜனநாயக கூட்டணி
கோலார் வடகிழக்கு: டி.வி.ஹரீஷ்
கோலார் தென்மேற்கு: நாகராஜப்பா
முல்பாகல் கிழக்கு: கே.என்.நாகராஜ்
முல்பாகல் மேற்கு: பி.வி. சாமே கவுடா