/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ., ஆதரவாளர் மீது காங்., தொண்டர்கள் தாக்கு
/
எம்.எல்.ஏ., ஆதரவாளர் மீது காங்., தொண்டர்கள் தாக்கு
எம்.எல்.ஏ., ஆதரவாளர் மீது காங்., தொண்டர்கள் தாக்கு
எம்.எல்.ஏ., ஆதரவாளர் மீது காங்., தொண்டர்கள் தாக்கு
ADDED : அக் 30, 2025 04:43 AM
சிக்கமகளூரு: பெண்கள் மற்றும் கட்சி பிரமுகர்களின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை வைத்து, 'பிளாக்மெயில்' செய்த காங்., - எம்.எல்.ஏ., ஆதரவாளரை, அக்கட்சி தொண்டர்களே தாக்கினர்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா. இவரது ஆதரவாளர் ஆதித்யா, சிக்கமகளூரின், ஆதிசக்தி நகரில் வசிக்கிறார். இவர், கட்சி பிரமுகர்கள், பெண்களின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை தவறாக பயன்படுத்தி, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதே காரணத்தால் கோபமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் ஷரீப் உட்பட சிலர், நேற்று காலை ஆதித்யாவின் வீட்டுக்குள் புகுந்து, அவரை கண் மூடித்தனமாக தாக்கினர். 'அவரை அடிக்காதீர்கள்' என, அவரது மனைவி கதறி, அழுதும் விடவில்லை. இறுதியில் கணவரை அறைக்குள் தள்ளி, வெளிப்புறமாக தாழிட்டு காப்பாற்றினார்.
தொண்டர்கள் அங்கிருந்து சென்ற பின், கணவரை மருத்துவமனையில் சேர்த்தார். பலத்த காயங்களுடன் ஆதித்யா சிகிச்சை பெறுகிறார். இவரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

