தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ என்னை கருணை கொலை செய்யுங்க ராகுலுக்கு காங்., தொண்டர் கடிதம்

 என்னை கருணை கொலை செய்யுங்க ராகுலுக்கு காங்., தொண்டர் கடிதம்

 என்னை கருணை கொலை செய்யுங்க ராகுலுக்கு காங்., தொண்டர் கடிதம்


ADDED : ஏப் 20, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: காங்கிரஸ் தொண்டர் ஒருவர், தனக்கு எம்.எல்.சி., பதவி அளிக்க வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்யும்படி கோரியுள்ளார்.

மைசூரை சேர்ந்த பசவண்ணா என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டராக இருக்கிறார். மைசூரில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. கட்சியின் எந்த நிகழ்ச்சி. ஆலோசனை கூட்டம் என்றாலும், முதல் ஆளாக ஆஜராவார். ஆயினும், இவரை கட்சி கண்டு கொள்ளவில்லை.

கட்சிக்காக உழைத்தும் தனக்கு எந்த பதவியும் கிடைக்காததால், விரக்தி அடைந்துள்ள அவர் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

காங்கிரசுக்காக நான் பல ஆண்டாக சேவை செய்கிறேன். ஆனால் இதுவரை எனக்கு, எந்த அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. மைசூரு தசரா கமிட்டியில் கூட, என்னை நியமிப்பது இல்லை.

இம்முறை எனக்கு எம்.எல்.சி., பதவி தாருங்கள். இல்லையென்றால் கருணை கொலை செய்யுங்கள். ஏற்கனவே மூன்று முறை கடிதம் எழுதினேன். ஆனால் பதில் வரவில்லை. தற்போது நான்காவது முறையாக, கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us