தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மீண்டும் எம்.எல்.ஏ., ஆனார் காங்., வினய் குல்கர்னி

 மீண்டும் எம்.எல்.ஏ., ஆனார் காங்., வினய் குல்கர்னி

 மீண்டும் எம்.எல்.ஏ., ஆனார் காங்., வினய் குல்கர்னி


ADDED : ஆக 04, 2026 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 02:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினய் குல்கர்னி, மீண்டும் எம்.எல்.ஏ.,வானார்.

தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மே 2ம் தேதி, அவரின் எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், ஜாமின் வழங்கி, ஜூலை 31ல் உத்தரவிட்டது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபை செயலர் விசாலாட்சி வெளியிட்டு உள்ள அறிக்கை:

உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை கருத்தில் கொண்டு, வினய் குல்கர்னியின் தகுதி நீக்கம் குறித்த அறிவிப்பு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு, அவரது சட்டசபை உறுப்பினர் அந்தஸ்து இதன்மூலம் மீட்டெடுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கான சட்டசபை செயலக உத்தரவு நகல், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us