ADDED : ஆக 04, 2026 02:15 AM

ஜனார்த்தன ரெட்டி தத்துவம் பா.ஜ., -- - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ''வால்மீகி அபிவிருத்தி கழகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்லாரி ஊரக எம்.எல்.ஏ., நாகேந்திராவை, மீண்டும் அமைச்சராக நியமிப்பதை வரவேற்பதா, வேண்டாமா என்பதை மாவட்ட மக்கள் முடிவு செய்ய வேண்டும் ,²' ' என்றார்.
விஷம் குடிக்க முயற்சி பங்கார்பேட்டை எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமிக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருவர் விஷம் குடிக்க முயற்சித்தார். அவரை கூட்டத்தில் இருந்தவர்கள் தடுத்து காப்பாற்றினர்.
சொல்லி அழ யாருமில்லை பல்லாரி மாவட்டம், குட்லிகி தொகுதி எம்.எல்.ஏ., என்.ஒய். கோபால கிருஷ்ணா கூறுகையில், ''நான் எந்த நிலையிலும் கட்சி மாறாதவன். நான் சொல்லி அழ அப்பா, அம்மா யாரும் இல்லை ,' ' என்று செய்தியாளர்களிடம் கதறினார்.
