ADDED : ஆக 04, 2026 02:15 AM

பெங்களூரு: மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் நேற்று பெங்களூரில் அளித்த பேட்டி:
அமைச்சர் பதவி கிடைக்காததால், எங்களின் எம்.எல்.ஏ.,க்களில் சிலர், கோபம், அதிருப்தியில் இருப்பது, என் கவனத்துக்கு வந்துள்ளது. அவர்களின் உணர்வுகளை கட்சி அலட்சியப்படுத்தாது. அமைச்சரவையில் சிலருக்கு மட்டுமே, பதவி கிடைக்கும். கட்சி பணிகளை செய்யவும், மக்களுக்கு தொண்டு செய்ய பதவி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தகுதியான தலைவர்களுக்கு, அவர்களின் திறன், அனுபவம் அடிப்படையில் பதவிகள் கிடைக்கும்.
அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில். ராஜினாமா போன்ற அவசர முடிவை எடுக்க கூடாது என, எங்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி, அவர்களின் கருத்துகளை மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.
தற்போது அமைச்சராக பதவி ஏற்றவர்களுக்கு மற்ற எம்.எல்.ஏ.,க்கள் ஒத்துழைப்பு அளித்து, நல்லாட்சி நடக்க செய்ய வேண்டும். மக்களுக்கு கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் மிகப்பெரிய பொறுப்பு, நமக்கு உள்ளது. தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை விட, கட்சியின் நலனே முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
