தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.ஐ.ஆர்., பெயரில் ரூ.3.49 லட்சம் மோசடி

 எஸ்.ஐ.ஆர்., பெயரில் ரூ.3.49 லட்சம் மோசடி

 எஸ்.ஐ.ஆர்., பெயரில் ரூ.3.49 லட்சம் மோசடி


ADDED : ஆக 04, 2026 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'எஸ்.ஐ.ஆர்., பெயரில் சைபர் மோசடியாளர்கள், 3.49 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர். எனவே கவனமாக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

பெங்களூரின், ஜீவன்பீமா நகரில் வசிப்பவர் பார்த்தசாரதி. சில நாட்களுக்கு முன், இவருக்கு வாட்ஸாப் எண்ணில் இருந்து, அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மத்திய தேர்தல் ஆணைய அதிகாரி என, அறிமுகம் செய்து கொண்டார்.

இந்நபர், 'நீங்கள் ஏற்கனவே சமர்ப்பித்த எஸ்.ஐ.ஆர்., மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்' என்றார்.

ரூ.5 கட்டணம் இதற்காக லிங்க் ஒன்றை அனுப்பி, அதை நிரப்பும்படி கூறினார். இதை உண்மை என, நம்பிய பார்த்தசாரதி. லிங்கை கிளிக் செய்து, தன் பெயர், முகவரி உட்பட, அனைத்து தகவல்களையும் நிரப்பினார்.

விண்ணப்பத்தை பெற, ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தும்படி அந்நபர் கேட்டார். பார்த்தசாரதியும் கிரெடிட் கார்டு மூலம் பரிமாற்றம் செய்ய முற்பட்ட போது, பரிமாற்றம் ஆகவில்லை.

அப்போது அந்நபர், 'கியூஆர் கோட்' அனுப்பினார். அதில் ஐந்து ரூபாயை பார்த்தசாரதி பரிமாற்றம் செய்தார். சிறிது நேரத்துக்கு பின், இவரது கணக்கில் இருந்து, படிப்படியாக 3.49 லட்சம் ரூபாய் பரிமாற்றம் ஆனது.

இதை கவனித்த பார்த்தசாரதிக்கு, தான் ஏமாந்தது தெரிந்தது. உடனடியாக ஜீவன் பீமாநகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.

பல வழிகள் இது குறித்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:

சைபர் குற்றவாளிகள், பல வழிகளில் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். தேர்தல் அதிகாரிகள், பி.எல்.ஓ., அல்லது எஸ்.ஐ.ஆர்., ஊழியர்களை போன்று, மக்களை தொடர்பு கொள்ளக்கூடும். தகவல், ஆவணங்கள், ஓ.டி.பி., கேட்கலாம். போலியான லிங்க், செயலி அனுப்புவர், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் பரிசீலனைக்கு, தேர்தல் அதிகாரிகள் பணம் கேட்கமாட்டார்கள் என்பதை, கவனத்தில் வைத்து கொள்ளவும். எஸ்.ஐ.ஆர்., படிவம் வாட்ஸாப்களில் அனுப்பப்படாது.

அறிமுகம் இல்லாத நபர்கள் அனுப்பும் லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். செயலி அல்லது ஏபிகே பைல்களை டவுன்லோட் செய்யாதீர்கள். ஓ.டி.பி., வங்கி தகவல்கள் உட்பட, தனிப்பட்ட தகவல்களை, யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us