/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'காங்கிரசார் நன்றியுள்ள நாய்கள்' மஹாதேவப்பாவுக்கு சுரேஷ் சூடு
/
'காங்கிரசார் நன்றியுள்ள நாய்கள்' மஹாதேவப்பாவுக்கு சுரேஷ் சூடு
'காங்கிரசார் நன்றியுள்ள நாய்கள்' மஹாதேவப்பாவுக்கு சுரேஷ் சூடு
'காங்கிரசார் நன்றியுள்ள நாய்கள்' மஹாதேவப்பாவுக்கு சுரேஷ் சூடு
ADDED : பிப் 17, 2026 11:46 PM

பெங்களூரு: ''காங்கிரசார் யாரும் தெரு நாய்கள் அல்ல... நன்றியுள்ள நாய்கள்,'' என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ், சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவுக்கு, பதிலடி கொடுத்தார்.
நேற்று முன்தினம் அமைச்சர் மஹாதேவப்பாவின் ஊடகத்தினர் சந்திப்பின் போது, முதல்வர் பதவி விஷயத்தில் எம்.எல்.ஏ.,க்களின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மஹாதேவப்பா, 'தெரு நாய்களை கட்டுப்படுத்தும்படி, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் ஏதோ விளக்கம் கூறி நழுவினார்.
முதல்வர் சித்தராமையா ஆதரவு கோஷ்டியில், அடையாளம் காணப்படும் மஹாதேவப்பா, துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர்களை நாயுடன் ஒப்பிட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பதிலடி கொடுத்து, சிவகுமாரின் தம்பியும், முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
முதல்வர் பதவி விவாதம் குறித்து, நாயுடன் ஒப்பிட்டு அமைச்சர் மஹாதேவப்பா பேசியது பற்றி, எனக்கு தெரியாது. ஆனால் காங்கிரஸ் விசுவாசிகள், தெரு நாய்கள் அல்ல; நன்றியுள்ள நாய்கள். தெரு நாய்க்கு உணவிடுவது எதற்காக, வீட்டை காவல் காப்பதற்கு தானே. நாய்க்குள்ள நன்றி, மனிதர்களுக்கு இருக்காது.
நாய்கள், தன் எஜமானருக்கு நன்றிக்கடனை தீர்க்கின்றன. வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு, நன்றி இருக்காது என, நான் கூறவில்லை. யாரை நாயுடன் ஒப்பிட்டு, அமைச்சர் பேசினார் என்பது தெரியாது.
எம்.எல் .ஏ.,க்கள் வெளிநாடுகளை சுற்றி பார்க்கும் நோக்கில், வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களின் விருப்பப்படி செல்கின்றனர். இதில் சிறப்பேதும் இல்லை. வெளிநாட்டு சுற்றுலா செல்வது, அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும். எனவே குடும்பத்துடன் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

