sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ரத்த புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய எஸ்.பி.,

/

 ரத்த புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய எஸ்.பி.,

 ரத்த புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய எஸ்.பி.,

 ரத்த புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய எஸ்.பி.,


ADDED : பிப் 17, 2026 11:47 PM

Google News

ADDED : பிப் 17, 2026 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: ரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் மூன்றரை வயது சிறுவனின் கனவு நனவானது. இவரது ஆசையை தாவணகெரே எஸ்.பி., சேகர் நிறைவேற்றினார்.

தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி தாலுகாவின் ஹொசள்ளி கிராமத்தில் வசிப்பவர் பிரபு. இவரது மனைவி அனுஷா. இவர்களின் இரண்டாவது மகன் ஹிதார்த்துக்கு மூன்றரை வயதாகிறது. இவருக்கு ஒன்றரை வயதாக இருக்கும் போது, ரத்த புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின் பலனாக 80 சதவீதம் குணம் அடைந்துள்ளார்.

பிரபுவுக்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஹிதார்த் பிறந்த தினமே, தன் மகனை போலீஸ் அதிகாரியாக்க வேண்டும் என, கனவு கண்டார். மகனுக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்ததும், பெற்றோர் வருத்தம் அடைந்தனர்.

மகனை போலீஸ் சீருடையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை மறையவில்லை. எனவே நேற்று காலையில், மகனுக்கு போலீஸ் சீருடை அணிவித்து, தாவணகெரே எஸ்.பி., அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். எஸ்.பி., சேகரிடம் தன் மகனின் நிலையை விவரித்தார். இதை உணர்ந்த எஸ்.பி., சேகர், சிறுவன் ஹிதார்த்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அது மட்டுமின்றி, தன் இருக்கையில் சிறுவனை அமர்த்தி, சிறிது நேரம் எஸ்.பி.,யாக பணியாற்ற வாய்ப்பளித்தார். சிரித்த முகத்துடன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவனை பார்த்து, போலீஸ் அதிகாரிகள் மகிழ்ந்தனர். எஸ்.பி., சேகரின் செயலை பலரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us