/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாடகைக்கு வீடு பார்க்க சென்று திருடிய போட்டோகிராபர் கைது
/
வாடகைக்கு வீடு பார்க்க சென்று திருடிய போட்டோகிராபர் கைது
வாடகைக்கு வீடு பார்க்க சென்று திருடிய போட்டோகிராபர் கைது
வாடகைக்கு வீடு பார்க்க சென்று திருடிய போட்டோகிராபர் கைது
ADDED : பிப் 17, 2026 11:47 PM
ஒயிட்பீல்டு: வாடகை வீடு தேட சென்று, திருட்டில் ஈடுபட்ட போட்டோ கிராபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரின் ஒயிட்பீல்டில் வசிப்பவர் கிரண், 38. போட்டோ கிராபரான இவர், சொந்தமாக ஸ்டூடியோ நடத்தி வந்தார். கொரோனா பரவிய நேரத்தில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஸ்டூடியோவை மூடினார். கேமரா இருந்ததால் சிறு சிறு நிகழ்ச்சிகளில், போட்டோக்கள் எடுத்து கொடுத்து குடும்பத்தை நிர்வகித்தார்.
இவர் வீட்டை மாற்ற வேண்டி வந்ததால், சில நாட்களுக்கு முன், ஒயிட் பீல்டின் நாகொண்டனஹள்ளியில் வாடகை வீடு தேடி சென்றார். இப்பகுதியில் மென் பொறியாளர் ஜெகதீஷ் என்பவரின் வீடு உள்ளது. இவரது வீட்டு அருகில் வீடு வாடகைக்கு உள்ளதாக போர்டு இருந்ததை, கிரண் கவனித்தார்.
அந்த வீட்டை பற்றி தகவல் கேட்க, ஜெகதீஷின் வீட்டு அருகில் சென்ற போது, ஷூக்கள் வைக்கும் ரேக்கில், சாவி இருப்பதை கண்டார்.
அந்த சாவியை எடுத்து கதவை திறந்து, உள்ளே சென்று பீரோவில் இருந்த 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடினார். மீண்டும் வீட்டை பூட்டி, சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு, அங்கிருந்து சென்றார்.
வீட்டுக்கு வந்த ஜெகதீஷ், திருட்டு நடந்திருப்பதை பார்த்து, ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு வந்த போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, கிரணின் அடையாளம் பதிவாகியிருந்தது. அவரை தேட துவங்கினர்.
வாடகைக்கு வீடு தேடி சென்ற இடத்தில், திருடனாக மாறியது கிரணின் மனதை வாட்டியது. செய்த பாவத்தை போக்கி கொள்ள, மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்துவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

