தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்கிரசின் சமர்த், உமேஷ் எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்பு

 காங்கிரசின் சமர்த், உமேஷ் எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்பு

 காங்கிரசின் சமர்த், உமேஷ் எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்பு


ADDED : மே 15, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 03:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: இடைத்தேர்தலில் வெற் றி பெற்ற காங்கிரசின் சமர்த், உமேஷ் நேற்று எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு, சபாநாயகர் காதர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சாமனுார் சிவசங்கரப்பா, மேட்டி ஆகியோர் மறைவால் காலியான, தாவணகெரே தெற்கு, பாகல்கோட் தொகுதிகளுக்கு, கடந்த மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

கடந்த 4ம் தேதி முடிவுகள் வெளியாகின. தாவணகெரே தெற்கில் சாமனுார் சிவசங்கரப்பா பேரன் சமர்த் மல்லிகார்ஜுன், பாகல்கோட்டில் மேட்டி மகன் உமேஷ் மேட்டி வெற்றி பெற்று, புதிய எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் நேற்று விதான் சவுதாவில், எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்று கொண்டனர். இருவருக்கும், சபாநாயகர் காதர் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து கூறினார்.

பதவி ஏற்ற பின், சமர்த்தனது தாய் பிரபாவிடமும், உமேஷ், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியிடமும் ஆசி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us