/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பயங்கரவாதிக்கு உதவ பரப்பன அக்ரஹாரா சிறையில்... கூட்டு சதி!: போலீசாரும், மருத்துவரும் சகட்டுமேனிக்கு சலுகை
/
பயங்கரவாதிக்கு உதவ பரப்பன அக்ரஹாரா சிறையில்... கூட்டு சதி!: போலீசாரும், மருத்துவரும் சகட்டுமேனிக்கு சலுகை
பயங்கரவாதிக்கு உதவ பரப்பன அக்ரஹாரா சிறையில்... கூட்டு சதி!: போலீசாரும், மருத்துவரும் சகட்டுமேனிக்கு சலுகை
பயங்கரவாதிக்கு உதவ பரப்பன அக்ரஹாரா சிறையில்... கூட்டு சதி!: போலீசாரும், மருத்துவரும் சகட்டுமேனிக்கு சலுகை
ADDED : ஜூலை 10, 2025 11:10 PM

பெங்களூரு: பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தப்பிச் செல்ல, பயங்கரவாதி நாசிருடன் சிறையின் ஏ.எஸ்.ஏ., மன நல மருத்துவர் உள்ளிட்டோர் சதித்திட்டம் தீட்டி வந்தது, என்.ஐ.ஏ., விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அத்துடன் பயங்கரவாதிகளுக்கு சிறையில் பல்வேறு சலுகைகளை அளித்ததும் அதற்காக பணம் பெற்றதும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் இருந்து கொண்டே, பெங்களூரில் பயங்கரவாதம் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக, 2023ல், பெங்களூரின் சுல்தான்பாளையா, பத்ரப்பா லே - அவுட் உட்பட பல்வேறு இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
பயங்கரவாத செயல்களை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டிய ஐவரை கைது செய்தனர். இவர்களின் வீட்டில் கிரானைட், நாட்டு துப்பாக்கிகள், வெடி பொருட்கள், டார்ச் லைட் போன்ற வாக்கி, டாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயுள் தண்டனை
அதன்பின் இவர்களிடம்,தேசிய புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சதியில் தொடர்பு கொண்ட பயங்கரவாதி நாசிரை கைது செய்தனர். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூரில் 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு உட்பட, 20க்கும் மேற்பட்ட பயங்கரவாத செயல்களில் தொடர்பு கொண்டவர்.
இவர் சிறையில் இருந்து கொண்டே, பயங்கரவாதம் நிகழ்த்த திட்டம் தீட்டினர். பல்வேறு குற்றங்களை செய்து, சிறைக்கு வந்த ஐந்து முஸ்லிம் இளைஞர்களை ஈர்த்து, அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்தார்.
இவர்களும் விடுதலையாகி வெளியே சென்ற பின், குண்டுவெடிப்பு நிகழ்த்த தயாராகினர். ஆனால் அதற்குள், ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ததால், பயங்கரவாத சம்பவம் தடுக்கப்பட்டது.
இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின்படி, பெங்களூரு, மங்களூரு, கோலாரின் ஐந்து இடங்களில் இரண்டு நாட்களுக்கு முன்பு, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
திடுக் தகவல்கள்
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் மனநல மருத்துவர் நாகராஜ், இதே சிறையின் ஏ.எஸ்.ஐ., சாந்த் பாஷா, பயங்கரவாதி ஜூனைத் அகமது தாய் அனீஸ் பாத்திமாவை கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன.
பணத்தாசையால், சிறையில் உள்ள மன நல மருத்துவர் நாகராஜ், நாசிர் உள்ளிட்ட லஸ்கர் இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் மற்ற கைதிகளுக்கு மொபைல் போன் விற்பனை செய்துள்ளார்.
இதற்காக தன் உதவியாளர் பவித்ராவையும் பயன்படுத்தினார். 2,000 முதல் 3,000 ரூபாய் விலையுள்ள மொபைல் போன்களை, 10,000 முதல் 50,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இந்த போன்களை பயன்படுத்தி, நாசிர் குண்டுவெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியது, தெரிய வந்துள்ளது.
தற்போது என்.ஐ.ஏ., பிடியில் உள்ள ஏ.எஸ்.ஐ., சாந்த் பாஷா, சிறையில் உள்ள நாசிருக்கும், மற்ற கைதிகளுக்கும் பல விதங்களில் உதவியுள்ளார். குறிப்பாக நாசிர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தப்பிச்செல்ல, வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
கைதிகளை நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை, சாந்த் பாஷா ஏற்றிருந்தார். இதை பயன்படுத்தி, நாசிரை தப்ப வைக்க முயற்சித்தார். ஆனால் மற்ற போலீசாரின் நடவடிக்கையால், அவரது திட்டம் தோல்வி அடைந்தது என்பதும், என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அனைவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.