தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு பள்ளிகளில் 1,582 கழிப்பறைகள் கட்ட ஒப்புதல்

 அரசு பள்ளிகளில் 1,582 கழிப்பறைகள் கட்ட ஒப்புதல்

 அரசு பள்ளிகளில் 1,582 கழிப்பறைகள் கட்ட ஒப்புதல்


ADDED : ஆக 20, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கர்நாடகாவில் 1,250 அரசு பள்ளிகளில், 1,582 கழிப்பறைகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறினார்.

சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் யு.பி.பனகர், நயனா, சன்னாரெட்டி பாட்டீல் துன்னுார் கேட்ட கேள்விகளுக்கு, பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்கரப்பா அளித்த பதில்:

பள்ளி கல்வி துறையின் சுகாதார திட்டத்தின் கீழ், 2025 - 2026ம் நிதியாண்டில் மாநிலத்தில் உள்ள, 1,250 அரசு பள்ளிகளில் 1,582 கழிப்பறைகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நிதி நிலை அறிக்கையின்படி, 50 அரசு உயர்நிலை பள்ளிகளை, இளங்கலை கல்லுாரிகளாக தரம் உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, யாத்கிர் மாவட்டம் ஷகாபுரா தாலுகா தோரணஹள்ளி உயர்நிலை பள்ளி இளங்கலை கல்லுாரியாக தரம் உயர்த்தப்படும்.

பல்கலைக்கழகங்களில் சிறப்பு விரிவுரையாளர்களுக்கு முன்பு மாதம் 12,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இப்போது 14,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு வேறு எந்த வசதிகளையும் வழங்க விதிமுறைகள் அனுமதிக்கவில்லை. தகுதியின் அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us