தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 3 மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து

 3 மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து

 3 மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து


ADDED : ஆக 20, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக தனியார் நர்சிங் ஹோம் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய, மூன்று தனியார் மருத்துவமனைகளின் லைசென்ஸ், ரத்து செய்யப்பட்டது. நான்கு மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் காந்தராஜு தலைமையில், நேற்று முன் தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் விதிகளை மீறி செயல்பட்ட பெங்களூரின் டி.தாசரஹள்ளியின் அய்யப்பா டெம்பிள் மெடிக்கல் சென்டருக்கு 50,000 ரூபாய், ஜிகனியின் பத்மகிரி கிளினிக்குக்கு ஒரு லட்சம் ரூபாய், பி.ஜி.சாலையின் ஹர்ஷவர்த்தன் மருத்துவமனைக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இம்மூன்று மருத்துவமனைகளும், கே.பி.எம்.இ., விதிமுறைகளை முற்றிலுமாக மீறியதால், இவற்றின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

ஹெச்.ஏ.எல்., சாலையில் உள்ள கிளவுட் நைன் மருத்துவமனைக்கு 50,000 ரூபாய், ஹுல்லஹள்ளியின் ஆர்.வி.கிளினிக்குக்கு ஒரு லட்சம் ரூபாய், முனேஸ்வரா லே - அவுட்டின், இக்ஷா கிளினிக் மற்றும் ராஜாஜி நகரின் என்.யூ., மருத்துவமனைகளுக்கு, தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us