/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுட்டெரிக்கும் வெயிலால் அவதி: கட்டுமான பணிகள் பாதிப்பு
/
சுட்டெரிக்கும் வெயிலால் அவதி: கட்டுமான பணிகள் பாதிப்பு
சுட்டெரிக்கும் வெயிலால் அவதி: கட்டுமான பணிகள் பாதிப்பு
சுட்டெரிக்கும் வெயிலால் அவதி: கட்டுமான பணிகள் பாதிப்பு
ADDED : மார் 27, 2025 11:04 PM
பெங்களூரு: பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், கட்டட பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் தொய்வடைந்துள்ளன.
கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெயில் தகிக்கிறது. மக்கள் பரிதவிக்கின்றனர்.
பணிக்கு செல்லும் ஊழியர்கள், வயலுக்கு செல்லும் விவசாயிகள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் பெரும் அவதிப்படுகின்றனர். தட்சிணகன்னடா, உடுப்பி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 35 டிகிரி செல்ஷியஸ் முதல் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை நிலவுகிறது. ஏப்ரல் 5 வரை வெப்பக்காற்று வீசும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மதிய நேரத்தில் வெளியே தலை காட்ட முடிவதில்லை. அரசு அலுவலகங்களில் மின் விசிறி இருந்தாலும், காற்று சூடாக வீசுகிறது. உள்ளே அமர்ந்து பணியாற்ற முடியவில்லை என, புலம்புகின்றனர்.
பகலில் வெப்பம் தீயாக கொளுத்துவதால், கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. உடல் ஆரோக்கியமும் பாதிப்படைகிறது. எனவே தொழிலாளர்கள் பணிக்கு வர தயங்குகின்றனர்.
வெயிலுக்கு பயந்து, ஆயிரக்கணக்கான கட்டட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் பல நகரங்களில் கட்டட பணிகளுக்கு, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆட்கள் கிடைக்காமல் கட்டுமான நிறுவனங்கள் அவதிப்படுகின்றன. பணிகள் பாதியில் நிற்கின்றன.