ADDED : மார் 19, 2026 05:51 AM

அ நிறம் | அளவு
காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹெச்.ஒய்.மேட்டி மறைவால் பாகல்கோட் தொகுதிக்கு, அடுத்த மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மேட்டி குடும்பத்தில் ஒருவருக்கு சீட் என்று முடிவாகி உள்ளது. ஆனால் மேட்டி மகன் மல்லிகார்ஜுன், மகள் மகாதேவி இடையில், சீட் பெற போட்டி எழுந்து உள்ளது.
இந்நிலையில் மேட்டி மகன்களான மல்லிகார்ஜுன், உமேஷ், மகள்கள் மகாதேவி, பயக்கா ஆகியோருடன், விதான் சவுதாவில் உள்ள தனது அறையில், முதல்வர்சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். 'சீட்டுக்காக சண்டை போடாமல் யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அவர்கள் வெற்றிக்காக உழையுங்கள்' என்று, முதல்வர் அறிவுரை கூறி அனுப்பி உள்ளார்.
