/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிக்கபல்லாபூர் மாவட்ட காங்., தலைவர் பதவிக்கு போட்டி
/
சிக்கபல்லாபூர் மாவட்ட காங்., தலைவர் பதவிக்கு போட்டி
சிக்கபல்லாபூர் மாவட்ட காங்., தலைவர் பதவிக்கு போட்டி
சிக்கபல்லாபூர் மாவட்ட காங்., தலைவர் பதவிக்கு போட்டி
ADDED : ஜூலை 05, 2025 10:54 PM

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, இருதரப்பு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக, இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர் கேசவ் ரெட்டி.
இவரை சிக்கபல்லாபூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக அரசு நியமித்துள்ளது. இதனால் மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
புதிய தலைவர் பதவிக்கு குருபர் சமூகத்தை சேர்ந்தவரும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான நாராயணசாமி, ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் பிரகாஷ் ஆகிய இருவருக்கும் இடையே போட்டி எழுந்துள்ளது.
இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க, அமைச்சர் எம்.சி.சுதாகர், பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி, சித்தலகட்டா முன்னாள் எம்.எல்.ஏ., முனியப்பா ஆகியோர் ஒப்புதல் தேவைப்படுகிறது.
நாராயணசாமி, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வருக்கு நெருக்கமானவராக உள்ளார். ஆனால் எம்.எல்.ஏ.,வுக்கு எதிரான அணியில் பிரகாஷ் உள்ளார்.
இதனால் பிரகாஷை தலைவராக தேர்வு செய்வதை தடுக்க, திரைமறைவில் பிரதீப் ஈஸ்வர் முயற்சித்து வருகிறார்.
தலைவர் பதவிக்கு இருதரப்புக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளதால், புதிய தலைவரை தேர்வு செய்ய தொண்டர்களின் கருத்தை கேட்பதற்காக, சித்ரதுர்கா முன்னாள் எம்.பி., சந்திரப்பாவை பொறுப்பாளராக, காங்கிரஸ் நியமித்துள்ளது.
அவர் விரைவில் சிக்கபல்லாபூர் சென்று, தொண்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.