/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாய்களை கட்டுப்படுத்துங்கள் சட்டசபையில் காரசார விவாதம்
/
நாய்களை கட்டுப்படுத்துங்கள் சட்டசபையில் காரசார விவாதம்
நாய்களை கட்டுப்படுத்துங்கள் சட்டசபையில் காரசார விவாதம்
நாய்களை கட்டுப்படுத்துங்கள் சட்டசபையில் காரசார விவாதம்
ADDED : ஆக 14, 2025 04:02 AM

பெங்களூரு: தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, கர்நாடக சட்டசபையில், காரசார விவாதம் நடந்தது.
பூஜ்ய வேளை ஆரம்பிப்பதற்கு முன் நடந்த விவாதம்:
ம.ஜ.த., - சுரேஷ்பாபு: தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, கர்நாடகாவிலும் பின்பற்றும்படி, அரசுக்கு உத்தரவிடுங்கள். பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தெரு நாய்களின் தாக்குதால் பலர் பலியாகின்றனர்.
சபாநாயகர் காதர்: விதான் சவுதாவிலும் நாய்களின் தொல்லை உள்ளது.
பா.ஜ., - சுரேஷ்குமார்: கர்நாடகாவில் 2 லட்சம் பேர், தெரு நாய்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். பெங்களூரில் மட்டுமே 18 பேர், ரேபிஸ் நோய் தாக்கி இறந்துள்ளனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், மூன்று நகரங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை, கர்நாடகாவிற்கும் விஸ்தரிக்க வேண்டும்.
பா.ஜ., - அஸ்வத்நாராயணா: தெரு நாய்களின் தொல்லை அதிகமாகி விட்டது. நாய்களை விரும்புவோர் வீடுகளுக்குள், தெரு நாய்களை விடுங்கள். தயவு செய்து, தெரு நாய்களை கட்டுப்படுத்துங்கள். மிகவும் முக்கியமான விஷயம்.
பா.ஜ., - சுனில்குமார்: தெரு நாய்களை கட்டுப்படுத்தும்படி, பெங்களூரு மாநகராட்சிக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட வேண்டும். தெரு நாய்களுக்கு உணவளிப்பதை விட்டு விட்டு, கட்டுப்படுத்துங்கள்.
சபாநாயகர்: தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், உச்ச நீதிமன்றம் தான் வரவேண்டியதாயிற்று.
பா.ஜ., - உமாநாத் கோட்யான்: எம்.எல்.ஏ.,க்கள் பவனிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அறை முன்பு, மலம் கழித்து, சுற்றுச்சூழலை பாழ் செய்கிறது.
சுரேஷ்குமார்: எம்.எல்.ஏ.,க்கள் பவன், சபா நாயகர் கட்டுப்பாட்டில் தா ன் வருகிறது. சபாநாயகரே, நாய்களை விரட்டுங்கள்.
அஸ்வத் நாராயணா: எம்.எல்.ஏ.,க்கள் பவன், விதான் சவுதா இரண்டுமே சபாநாயகரின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், நாய்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்.
சபாநாயகர்: நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.