தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பிரதமர், மத்திய அமைச்சரின் முகத்தை மறைத்ததால் மாண்டியாவில் சர்ச்சை

பிரதமர், மத்திய அமைச்சரின் முகத்தை மறைத்ததால் மாண்டியாவில் சர்ச்சை

பிரதமர், மத்திய அமைச்சரின் முகத்தை மறைத்ததால் மாண்டியாவில் சர்ச்சை


UPDATED : நவ 28, 2026 12:00 AM

ADDED : நவ 27, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:00 AM ADDED : நவ 27, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாண்டியா: வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான தகவல் அறிவிப்பு பலகையில் இருந்த, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் குமாரசாமியின் உருவப்படங்களின் முகத்தின் மீது டேப் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாண்டியா நகரின் ‘மிம்ஸ்’ மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் மாண்டியா எம்.பி.,யான, மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமியின் சி.எஸ்.ஆர்., நிதியில் நடக்கின்றன.

பணிகளின் தகவலுக்காக பொருத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் குமாரசாமியின் உருவப்படங்களுடன், ம.ஜ.த., சின்னமும் அச்சிடப்பட்டிருந்தது.

இதற்கு, காங்கிரஸ் பிரமுகர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், பிரதமர், மத்திய அமைச்சரின் முகம் தெரியாதபடி மறைத்து, டேப் ஒட்டப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகையில் இருக்கும் முக்கியமானவர்களின் முகத்தை மறைத்தது சரியல்ல என, பா.ஜ., – ம.ஜ.த., தொண்டர்களும், பொதுமக்களும் அதிருப்தி தெரிவித்தனர்.

சர்ச்சை எழுந்ததால் விழித்து கொண்ட மிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் முகத்தில் ஒட்டியிருந்த டேப்பை அகற்றி, இருவரின் முகமும் நன்கு தெரியுமாறு வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us