தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஸ்கேனிங் ஆப்பரேட்டர்களை நியமிக்காமல் அரசு அலட்சியம்

ஸ்கேனிங் ஆப்பரேட்டர்களை நியமிக்காமல் அரசு அலட்சியம்

ஸ்கேனிங் ஆப்பரேட்டர்களை நியமிக்காமல் அரசு அலட்சியம்


UPDATED : நவ 28, 2026 12:00 AM

ADDED : நவ 27, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:00 AM ADDED : நவ 27, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனை மற்றும் சிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்’ இயந்திரங்கள் இருந்தும், நோயாளிகளுக்கு பயன்படவில்லை. இதற்கு காரணம், அரசு அதிகாரிகளின் அலட்சியம் என, குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையிலும், சிம்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் அதிநவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் இயந்திரங்கள் உள்ளன. இவற்றை இயக்க ஆப்பரேட்டர்கள் இல்லாததால், இயந்திரங்கள் இருந்தும் கூட நோயாளிகளுக்கு பயன்படவில்லை.

ஆப்பரேட்டர்களை நியமிக்காமல், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். தனியார் ஆய்வகங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, நோயாளிகளை ஸ்கேனிங்குக்காக தனியார் ஆய்வகங்களுக்கு செல்ல வைப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளின் ஸ்கேனிங் சென்டரை, உள் நோக்கத்துடன் பூட்டி வைத்துள்ளனர். இதனால் ஏழை நோயாளிகள், அதிக பணம் கொடுத்து தனியார் ஆய்வகங்களுக்கு சென்று, ஸ்கேனிங் செய்யும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.

அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, ஸ்கேனிங் ஆப்பரேட்டர்களை நியமிக்கும்படி நோயாளிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us