/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலைமை செயலர் பற்றி சர்ச்சை பா.ஜ., ரவிகுமார் மீது காங்., புகார்
/
தலைமை செயலர் பற்றி சர்ச்சை பா.ஜ., ரவிகுமார் மீது காங்., புகார்
தலைமை செயலர் பற்றி சர்ச்சை பா.ஜ., ரவிகுமார் மீது காங்., புகார்
தலைமை செயலர் பற்றி சர்ச்சை பா.ஜ., ரவிகுமார் மீது காங்., புகார்
ADDED : ஜூலை 03, 2025 05:12 AM

பெங்களூரு: தலைமை செயலர் ஷாலினியை பற்றி ஆட்சேபனை கருத்து தெரிவித்ததாக, பா.ஜ., மேல்சபை கொறடா ரவிகுமார் மீது போலீசில், காங்கிரஸ் புகார் செய்துள்ளது.
கர்நாடக அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் விதான் சவுதா காந்தி சிலை முன், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி தலைமையில் பா.ஜ., - எம்.எல்.சி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட மேல்சபை பா.ஜ., கொறடா ரவிகுமார், போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசும்போது, தலைமை செயலர் ஷாலினி குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அறிந்த கர்நாடக காங்கிரஸ் பொதுச் செயலர் மனோகர், விதான் சவுதா போலீஸ் நிலையத்தில், ரவிகுமார் மீது நேற்று புகார் கொடுத்தார்.
'கலபுரகி கலெக்டர் பவுசியா தரணம், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்' என கூறி சர்ச்சையில் சிக்கிய ரவிகுமார் மீது வழக்குப்பதிவான நிலையில், அவர் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.