தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 18 லட்சம் ரூபாய் 'வாட்ச்' அணிந்திருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை

 18 லட்சம் ரூபாய் 'வாட்ச்' அணிந்திருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை

 18 லட்சம் ரூபாய் 'வாட்ச்' அணிந்திருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை


ADDED : மார் 15, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால்: காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகவேந்திரா ஹிட்னால், தன் கையில், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் அணிந்திருந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கொப்பால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னால். இவர், நேற்று முன்தினம் தன் தொகுதிக்கு உட்பட்ட ஹிரேபங்கலா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, இடது கையில் அவர் அணிந்திருந்த வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சமூக வலைதளங்களில் இதுபற்றி விவாதம் நடந்த போது, ராகவேந்திரா ஹிட்னால் தன் கையில், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹுப்லாட் வாட்ச் அணிந்திருந்தது தெரியவந்தது. மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் விலை உயர்ந்த வாட்ச் அணிவதா என்ற சர்ச்சையும் எழுந்தது.

இதுகுறித்து ராகவேந்திர ஹிட்னால் நேற்று அளித்த பேட்டி:

நான் கையில் அணிந்திருந்த ஹுப்லாட் வாட்ச்சை, யாரும் எனக்கு பரிசாக தரவில்லை. என் சகோதரர்களில் ஒருவர் வாட்ச்சை எனக்கு தந்தார். மக்கள் பிரதிநிதிகள் விலை உயர்ந்த வாட்ச் அணியக் கூடாதா?.

எனக்கும் அமைச்சர் பதவி மீது ஆசை உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் தங்களை அமைச்சராக்க வேண்டும் என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை. சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டால், அனைவருக்கும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும். இதுபற்றி முதல்வரும், கட்சி மேலிடமும் முடிவு எடுப்பர். கொப்பால் மாவட்டத்தில் நானும், பசவராஜ் ராயரெட்டியும் மூத்த தலைவர்கள். எங்களில் ஒருவரை அமைச்சராக்கலாம். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருந்தால், துணை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சித்தராமையா கடந்த முறை முதல்வராக இருந்த போது, 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் கையில் அணிந்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததால், அந்த வாட்சை அரசின் கருவூலத்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us