தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ‘20 ஆண்டு’: தாவணகெரே நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ‘20 ஆண்டு’: தாவணகெரே நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ‘20 ஆண்டு’: தாவணகெரே நீதிமன்றம் தீர்ப்பு


UPDATED : அக் 18, 2026 12:00 AM

ADDED : அக் 17, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 12:00 AM ADDED : அக் 17, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தாவணகெரே நகரில் வசிக்கும், 16 வயது சிறுமியை, அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக், 22, என்பவர் காதலிப்பதாக நம்ப வைத்து, அவரது மனதை கரைத்தார். கடந்த 2022ன் பிப்ரவரி 3ம் தேதி, சிறுமி காணாமல் போனார். மகளை காணாமல் தேடிய பெற்றோர், தாவணகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரித்த போது, சிறுமியை கார்த்திக் திருமணம் செய்வதாக கூறி, பெங்களூருக்கு அழைத்து சென்றதும், அங்கு கோவிலில் திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது.

சிறுமியை விசாரித்த போது, தன்னை கார்த்திக் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை விவரித்தார். அதன்பின் கார்த்திக்கை போ லீசார் கைது செய்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணை முடிந்து, தாவணகெரே கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கார்த்திக்கின் குற்றம் உறுதியானது. அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 40,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஸ்ரீராமநாராயணா ஹெக்டே, நேற்று தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us