ADDED : ஜூன் 26, 2026 10:42 PM
- நமது நிருபர் -
வெள்ளை பூசணிக்காய் மற்றும் வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து, தேங்காய், கசகசா அரைத்த கலவை சேர்த்தால் சுவையான கூட்டு எளிதில் தயார்
l முட்டை வேகவைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்தால், முட்டை உடையாமல் நன்றாக வெந்து வரும்
l முளைகட்டிய கொண்டைக்கடலையை அரைத்து சப்பாத்தி செய்தால் சத்தானது
l காய்கறியில் வறுவல் செய்யும் போது, எண்ணெய் சூடாகும் நேரத்தில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் வறுவல் சூப்பராக இருக்கும்
l சமையலில் மிளகாய்க்கு பதிலாக மிளகு பயன்படுத்தினால், உணவிற்கு தனித்துவமான சுவை கிடைப்பதுடன், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பும் குறையும்
l ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது, இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவை,பாலில் கரைத்து சேர்த்தால், பாயசம் கெட்டியான பதத்துடன் சுவையாக இருக்கும்
l பாகற்காயை உப்பு, வெல்லம், மஞ்சள் துாள், எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து வறுத்தால், கசப்பு சுவை குறையும்.
l உருண்டை குழம்பு செய்ய பருப்பு கலவையை உருட்டும் போது, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து உருட்டினால், குழம்பில் போடும் போது உடையாமலும், கரையாமலும் இருக்கும்
l இட்லி பொடி அரைக்கும் போது சீரகம், மல்லி விதையை வறுத்து சேர்த்து அரைத்தால் வாசனையாக இருப்பதுடன், ஜீரணமும் எளிதில் ஆகும்
l அல்வா தயாரிக்கும் போது சிறிதளவு சோள மாவு சேர்த்து கிளறினால், அதன் பதம் நன்றாகவும், கெட்டியாகவும் இருக்கும்
l ரவா கேசரி, ரவா பர்பி செய்யும் போது தண்ணீ ரை குறைத்து கெட்டியான பால் சேர்த்தால் சுவை கூடும்
l ரசத்தில் ஒரு டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்தால் சுவை அள்ளும்.
l வெண்ணெய் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க, அதனுடன் சிறிதளவு உப்பை சேர்த்து வைக்கலாம்.
