/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் பைரதி சுரேஷ் நடத்திய பேச்சில் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
/
அமைச்சர் பைரதி சுரேஷ் நடத்திய பேச்சில் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
அமைச்சர் பைரதி சுரேஷ் நடத்திய பேச்சில் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
அமைச்சர் பைரதி சுரேஷ் நடத்திய பேச்சில் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
ADDED : ஜூலை 16, 2025 08:16 AM

பெங்களூரு : மாநகராட்சி ஊழியர்களின் பல கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால், மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நகராட்சி பொது நியமன விதிகளில் திருத்தங்கள், நகராட்சி ஊழியர்களையும் அரசு ஊழியர்களாகவே கருத்தில் கொள்வது, நகராட்சி அதிகாரிகளுக்கும் மற்ற துறைகளுக்கு வழங்கப்படுவது போல உரிய அங்கீகாரம் வழங்குவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு, மைசூரு, பல்லாரி உட்பட பல மாநகராட்சி ஊழியர்கள் பெங்களூரு சுதந்திர பார்க்கில் போராட்டத்தை கடந்த 8ம் தேதி போராட்டத்தை துவக்கினர்.
மனு
இதற்கிடையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து, மைசூரு மாநகராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் மனுக் கொடுத்தனர்.
இதையடுத்து ஊழியர்களுடன் பேச்சு நடத்த அரசு முடிவு செய்தது. நேற்று பெங்களூரு விகாஸ் சவுதாவில் நகர்ப்புற வளர்ச்சி, திட்டமிடல் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், மாநகராட்சி சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார்.
மாநில மாநகராட்சி ஊழியர் சங்க தலைவர் அம்ருத்ராஜ், அரசு ஊழியர் சங்க தலைவர் ஷதாக் ஷரி உட்பட சிலர் பேச்சில் பங்கேற்றனர்.
பேச்சின் முடிவில் அமைச்சர் பைரதி சுரேஷ் கூறியதாவது:
நகராட்சி ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படும். ஊழியர் நியமன விதிகளை திருத்துவதில் நிதித்துறையிடம் ஒப்புதல் பெறப்படும். மண்டல ஆணையர்கள் பதவியை உருவாக்குவது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
காலியாக உள்ள சுற்றுச்சூழல் பொறியாளர் பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி ஊழியர்களின் நிதிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பந்தம்
அரசு ஊழியர்களுக்கான 'ஜோதி சஞ்சீவினி' எனும் சுகாதார காப்பீட்டு திட்டம் மாநகராட்சி ஊழியர்களுக்கும் கிடைக்கும். இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஊழியர்களின் மருத்துவ செலவுகளை அனுமதிக்கும் அதிகாரம், மாநகராட்சி ஆணையருக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை அமைச்சர் நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததால், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக சங்கத்தினர் அறிவித்தனர்.