ADDED : பிப் 08, 2025 06:24 AM

பெங்களூரு: பெங்களூரில் வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஏரோ இந்தியா விமான கண்காட்சியும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை உலக முதலீட்டாளர் மாநாடும் நடக்க உள்ளது.
இதனை முன்னிட்டு நகரில் உள்ள பல இடங்களிலும் உள்ள சாலைகளை அழகு படுத்துவது, முக்கிய பகுதிகளில் போக்குவரத்தை குறைப்பது, போக்குவரத்து குறியீட்டு பலகைகளை வைப்பது, எல்.இ.டி., திரைகளை பொருத்துவது என பல பணிகளை பெங்களூரு மாநகராட்சி செய்து வருகிறது.
இப்பணிகள் குறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், மாநகராட்சி தலைமை இன்ஜினியர் பிரஹலாத், நிர்வாக பிரிவு சிறப்பு கமிஷனர் அவினாஷ் மேனன் ராஜேந்திரன், எலஹங்கா மண்டல கமிஷனர் ஹரிகவுடா உட்பட பல அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
ஹட்சன் சதுக்கம், வின்ட்சர் சதுக்கம், மேக்ரி சதுக்கம், ைஹகிரவுண்ட் சதுக்கம், விதான் சவுதா சந்திப்பு, சதாசிவநகர் போலீஸ் நிலைய சந்திப்பு, கல்பனா சந்திப்பு, மவுணட் கார்மல் கல்லுாரி, ராஜ்பவன் சதுக்கம், காபி போர்டு சந்திப்பு, டி.எம்.சி., சதுக்கம், கே.ஆர்.சதுக்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
எல்.இ.டி., திரைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா எனவும், ஜி.கே.வி.கே.,வில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.