தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மழையில் மர௸ம் விழுந்தது குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி திட்டம்

 மழையில் மர௸ம் விழுந்தது குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி திட்டம்

 மழையில் மர௸ம் விழுந்தது குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி திட்டம்


ADDED : ஜூன் 06, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் காற்று, மழைக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் விழுகின்றன. மரங்கள் விழுவதற்கு என்ன காரணம் என்பதை, ஜெர்மன் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்வது குறித்து, தேசிய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஜி.பி.ஏ.,விடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின், வனப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரில் பொது சாலைகள், பூங்காக்களில், 7.50 லட்சம் மரங்கள் இருப்பது, மரங்கள் கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கபட்டன. தற்போது கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. தனியார் இடங்கள், ராணுவ இடங்களில் உள்ள மரங்களை, கணக்கில் எடுத்து கொண்டால், 15 லட்சம் மரங்கள் இருக்கக்கூடும்.

நகரில் உள்ள மரங்கள் மழை, காற்றுக்கு முறிந்து விழுகின்றன. மழை, காற்றுக்கு தாக்குபிடிக்காமல், மரங்கள் முறிந்து விழ என்ன காரணம் என்பதை, ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்ய, தேசிய மரங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் முன் வந்துள்ளது.

இதற்கு, 4.45 கோடி ரூபாய்க்கு செலவாகும் என, ஜி.பி.ஏ.,வின் வனப்பிரிவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெர்மன் தொழில்நுட்பம் பயன்படுத்துவதால், அபாயமான மரங்களை சேதப்படுத்தாமல், அவற்றின் உட்பகுதியின் சூழ்நிலையை தெரிந்து கொள்ளலாம். மரத்தின் தண்டு பலவீனம் அடைந்துள்ளதா எளிதாக அறியலாம்.

ஜி,பி.ஏ.,வின் ஐந்து மாநகராட்சிகளில் தலா 300 மரங்களை ஆய்வு செய்ய, நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதற்காக அதிகம் செலவாகிறது. இதை குறைக்கும்படி, அந்நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். மரங்களின் ஆய்வு குறித்து, அந்தந்த மாநகராட்சிகள் முடிவு செய்து கொள்ளட்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us