/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
' இருமல் சிரப் பரிசோதனை உடலுக்கு பாதிப்பு இல்லை '
/
' இருமல் சிரப் பரிசோதனை உடலுக்கு பாதிப்பு இல்லை '
ADDED : அக் 12, 2025 10:16 PM

பெங்களூரு : ''இருமல் சிரப் மாதிரிகள் பரிசோதனையில், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய விஷயம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை,'' என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறி உள்ளார்.
இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் இருமல் சிரப் விவகாரத்தில், மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதுவரை, இங்குள்ள 390 இருமல் சிரப்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. பரிசோதனையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் எந்த காரணியும் கண்டுபிடிக்கவில்லை. அனைத்து மருந்து உற்பத்தியாளர்களின் தரநிலைகளும் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும்.
இருமல் மருந்துகள் விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட வேண்டும்.
துணை முதல்வர் சிவகுமார், பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இவை அனைத்திற்கும் அழைப்பிதழ்கள் கொடுக்க வேண்டும் என அவசியமில்லை. இருப்பினும், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, வீண் விளம்பரத்திற்காக சிவகுமார் நிகழ்ச்சியில் ரகளை செய்து உள்ளார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கட்சி மேலிடம் அனைத்து முடிவுகளையும் எடுக்கும். கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்படும் போதும், பா.ஜ., - எம்.பி.,க்கள் மத்திய அரசிடம் எதுவும் கேட்பதில்லை. பா.ஜ.,வில் தலைமைத்துவம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.