தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் தயாரிப்பு

விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் தயாரிப்பு

விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் தயாரிப்பு


UPDATED : அக் 24, 2026 02:45 AM

ADDED : அக் 23, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 02:45 AM ADDED : அக் 23, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்ய முயன்றவர்கள், ஆறு பேரை கைது செய்தனர்.

இம்மாதம் 21ம் தேதி காலையில், காமசமுத்திரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பலமந்தி சாலையின் அருகிலுள்ள வனப்பகுதியில், சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, சிலர், வனவிலங்குகளை வேட்டையாட முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

தங்கவயல் மாவட்ட போலீஸ் துறையின் சிறப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். துப்பாக்கிகள் மற் றும் பைகளுடன் திரிந்த கெம்பனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, 26, சந்திரப்பா, 32, சந்திரசேகர், 28, உமாபதி, 29, வெங்கடப்பா, 55, ஆகிய ஐந்து பேரிடம் விசாரித்தனர்.

அவர்களிடமிருந்து, மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், ஈயக்குண்டுகள், காலி தோட்டாக்கள், வனவிலங்கு வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது காமசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக, பிரகாஷ், 31, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தங்கள் வீட்டின் அருகே, சட்ட விரோதமாக துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்ததும், பழுதுபார்த்ததும் தெரிய வந்தது. பல பொருட்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், ராஜா ஆச்சாரி என்பவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us