தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மூதாட்டி கொலை மூவர் கைது

மூதாட்டி கொலை மூவர் கைது

மூதாட்டி கொலை மூவர் கைது


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்: பாகல்கோட், பீளகியில் வசித்தவர் கவுரவ்வா, 65. இவருக்கு இரண்டு மகன்கள். மனைவியின் பேச்சை கேட்டு கொண்டு, தாயை இரு மகன்களும் கொடுமைப்படுத்தினர். இதனால் தாய் கோவிலில் வசித்தார்.

நடப்பாண்டு மார்ச் 18ல், கோவிலில் கவுரவ்வா கொலையாகி கிடந்தார். விசாரணையில், கவுரவ்வாவின் இளைய மகன் படியப்பா சதாசிவா, மூத்த மகனின் மனைவி சாந்தவ்வா, இவரது சகோதரியின் மகன் சங்கரே, கொலையாளிகள் என்பது தெரிந்தது.

கவுரவ்வா பெயரில் இருந்த 5 ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு எழுதி தரும்படி மகனும், மருமகளும் தொல்லை கொடுத்தனர். மூத்த மருமகள் சாந்தவ்வாவுக்கு, வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த கவுரவ்வா திட்டினார்.

இந்த விஷயத்தை அவர் வெளியே சொல்வார் என்ற அச்சத்தாலும், சொத்துக்காகவும் அவரை தலையில் கல்லை போட்டு கொன்றதை, ஒப்புக்கொண்டனர். படியப்பா சதாசிவா, சாந்தவ்வா, சங்கர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us