/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மகள்கள்
/
கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மகள்கள்
கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மகள்கள்
கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மகள்கள்
ADDED : ஜூலை 04, 2025 11:11 PM

விஜயநகரா: லாரி மோதி, அரை கி.மீ., துாரம் காரை இழுத்துச் சென்றதில் அதில் பயணம் செய்த தம்பதி உயிரிழந்தனர். அவர்களின் குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
பாகல்கோட் மாவட்டத்தின், சட்னிஹாலு கிராமத்தை சேர்ந்தவர் முத்தப்பா பூஜார், 35. இவரது மனைவி ரேணுகா, 30. இவர்களுக்கு அனுஸ்ரீ, 9, ரூபஸ்ரீ, 6, குஷி, 4, என்ற மூன்று மகள்கள் உள்ளனர். முத்தப்பா பெங்களூரில் வாடகைக்கார் ஓட்டுநராக பணியாற்றினார்.
மொகரம் பண்டிகையை முன்னிட்டு, தன் மனைவி, மகள்களுடன் சொந்த கிராமத்துக்கு முத்தப்பா காரில் புறப்பட்டார்.
நேற்று முன் தினம் நள்ளிரவு, விஜயநகரா மாவட்டம், மரியம்மனஹள்ளி புறநகரின், கே.பி.டி.சி.எல்., அலுவலகம் முன், சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது.
மோதியதுடன் காரை அரை கி.மீ., துாரத்துக்கு இழுத்துச் சென்றதில், கார் நொறுங்கியது.
இதில் முத்தப்பா பூஜாரும், அவரது மனைவி ரேணுகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகள்கள் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து, அங்கு வந்த மரியம்மனஹள்ளி போலீசார், காரில் இருந்த தம்பதியின் உடல்களை மீட்டனர். காயமடைந்த சிறுமியரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்காக, கொப்பால் மருத்துவமனையில் இருந்து, ஹூப்பள்ளி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
விஜயநகரா எஸ்.பி., ஸ்ரீஹரி பாபு, நேற்று காலை சம்பவ இடத்தை பார்வையிட்டார்.