/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பார்சலில் கிழிந்த சேலைகள் அனுப்பி தம்பதியிடம் மோசடி
/
பார்சலில் கிழிந்த சேலைகள் அனுப்பி தம்பதியிடம் மோசடி
பார்சலில் கிழிந்த சேலைகள் அனுப்பி தம்பதியிடம் மோசடி
பார்சலில் கிழிந்த சேலைகள் அனுப்பி தம்பதியிடம் மோசடி
ADDED : ஆக 27, 2025 10:50 PM

ராய்ச்சூர் : சொந்தமாக தொழில் துவங்கும் ஆசையால், ஆன்லைனில் சேலைகள் ஆர்டர் செய்த தம்பதிக்கு, கிழிந்த சேலைகள் அனுப்பப்பட்டன.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வி நகரில் வசிப்பவர் மனோகர். இவரது மனைவி காளம்மா. இவர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
சில நாட்களுக்கு முன், சமூக வலைதளம் ஒன்றில், 100 ரூபாய்க்கு மூன்று தரமான சேலைகள் கிடைக்கும் என்ற விளம்பரத்தை கவனித்தனர். அங்கு மொத்தமாக சேலைகள் வாங்கி, விற்பனை செய்யலாம் என, தம்பதி முடிவு செய்தனர்.
விளம்பரத்தில் அளிக்கப்பட்டிருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு, 10,000 ரூபாய்க்கு சேலைகள் ஆர்டர் செய்தனர்.
சேலைகள் வந்தவுடன், விநாயகர் சதுர்த்தி நாளன்று தொழிலை துவக்க தயாராகினர். நேற்று முன் தினம் பார்சலில், சேலைகள் வந்தன. அதை பிரித்து பார்த்த போது, அதிர்ச்சி காத்திருந்தது.
பார்சலில் இருந்த 70 சேலைகளும் கிழிந்திருந்தன. ஒன்று கூட நன்றாக இல்லை.
விளம்பரத்தில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, பதில் வரவில்லை. அதன்பின் தம்பதியின் நம்பர், 'பிளாக்' செய்யப்பட்டது.
தம்பதி, மான்வி போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, மனோகர், காளம்மா தம்பதி வருத்தம் அடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு, தங்களை போன்று யாரும் ஏமாற வேண்டாம் என, அறிவுறுத்தியுள்ளனர்.