/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வறுமையால் ஆண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த தம்பதி
/
வறுமையால் ஆண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த தம்பதி
வறுமையால் ஆண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த தம்பதி
வறுமையால் ஆண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த தம்பதி
ADDED : ஆக 11, 2025 04:35 AM
மாண்டியா: வறுமை காரணமாக வளர்க்க முடியவில்லை என, கூறி பச்சிளம் குழந்தையை பெற்றோர், மகளிர், குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவின் கிராமம் ஒன்றில் வசி க்கும் தம்பதி கூலி வேலை செய்து பிழைக்கின்றனர்.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், மலவள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இம்மாதம், 6ம் தேதி அவருக் கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன் தினம் டிஸ்சார்ஜ் ஆகும் போது, குழந்தையை கொண்டு செல்ல தயங்கினர்.
வறுமையால் அவதிப்படும் தம்பதி, ஒரு மகனையே வளர்க்க முடியாமல் திணறுகின்றனர்.
தற்போது பிறந்த குழந்தையை வளர்க்க முடியாது; குழந்தை தங்களுக்கு வேண்டாம். மருத்துவமனையில் வைத்துக்கொள்ளும்படி மன்றாடினர்.
மருத்து வ அதிகாரிகள் புத்திமதி கூறியும், தம்பதி சம்மதிக்கவில்லை.
இது குறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறைக்கு, மருத்துவமனை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த அதிகாரிகள், பெற்றோரின் ஒப்புதலுடன் குழந்தையை பெற்று, சிறார்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 60 நாட்கள் குழந்தை, காப்பகத்தில் இருக்கும். அதற்குள் பெற்றோர் மனம் மாறி, குழந்தையை கேட்டால் ஒப்படைப்பர்.
ஒருவேளை அவர்கள் மனம் மாறாமல், பிடிவா தமாக இருந்தால், குழந்தையில்லாத தம்பதிக்கு, தத்து கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.