தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி மீட்பு

 தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி மீட்பு

 தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி மீட்பு


ADDED : மார் 11, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற, காதல் ஜோடி உயிருடன் மீட்கப்பட்டனர்.

தாவணகெரே டவுன் படா கிராசில் வசிப்பவர் சமீர், 19. இவரும், சிஞ்சனா, 18, என்பவரும் காதலித்தனர். இருவரும் வேறு மதம் என்பதால், இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி மைசூரு, ஷிவமொக்காவுக்கு சென்றனர். நேற்று காலை தாவணகெரேயின் ஹொன்னாளிக்கு வந்தனர்.

அப்பகுதியில் ஓடும் துங்கபத்ரா ஆற்றில் குதித்தனர். ஆழம் குறைவாக இருந்ததால், ஆற்றின் நடுவில் உள்ள பாறை மீது ஏறி அமர்ந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் அங்கு சென்று காதல் ஜோடியை மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சு நடத்தினர். பின், காதல் ஜோடியை அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us