தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமார் வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி

 சிவகுமார் வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி

 சிவகுமார் வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி


ADDED : மே 29, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: வரி ஏய்ப்பு வழக்கில், துணை முதல்வர் சிவகுமார் வெளிநாடுகளுக்கு செல்ல, சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்து உள்ளது.

கடந்த, 2017 ஆகஸ்டில், ராஜ்யசபாவில் காங்கிரசின் அகமது படேலை வெற்றி பெற வைக்கவும், குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை கர்நாடகாவுக்கு அக்கட்சி அனுப்பி வைத்தது.

அவர்கள் பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதியில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களை பாதுகாக்கும் பொறுப்பு, சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, பெங்களூரு, டில்லியில் உள்ள சிவகுமாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இது தொடர்பாக, சிவகுமார், சர்மா டிராவல்ஸ் உரிமையாளர் சர்மா, அவரது சகோதரர் சச்சின் நாராயண், ஆஞ்சநேயா ஹனுமந்தையா, ராஜேந்திரா ஆகியோர் மீது வருமான வரித்துறை வரி ஏய்ப்பு வழக்கு தொடர்ந்தனர்.

சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணையின் போது, வருமான வரித்துறை தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'ஈகிள்டன் சொகுசு விடுதியில் சோதனை நடத்தும் போது, ஆதாரங்களை அழித்துவிட்டார்' என வாதிட்டார்.

இதை மறுத்த சிவகுமார் தரப்பு வக்கீல், 'மனுதாரர் மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டு உள்ளது' என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 'நாட்டை விட்டு வெளியேறக்கூடாது' என்று நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

சொந்த தொழில் காரணமாகவும், மாநில அரசில் அமைச்சராக உள்ளதால், துறை தொடர்பாக வெளிநாடு செல்லவும் அனுமதிக்க வேண்டும்' என்று சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கே.என்.சிவகுமார் கூறியதாவது:

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா, அரபு நாடுகளுக்கு சிவகுமார் பயணிக்கலாம்.

அவர் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம், அது தொடர்பான பயண விபரங்களை, வருமான வரித்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால், அவர் மீது வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us