/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனார்த்தன ரெட்டிக்கு சிறப்பு சலுகை நீதிமன்றம் மறுப்பு
/
ஜனார்த்தன ரெட்டிக்கு சிறப்பு சலுகை நீதிமன்றம் மறுப்பு
ஜனார்த்தன ரெட்டிக்கு சிறப்பு சலுகை நீதிமன்றம் மறுப்பு
ஜனார்த்தன ரெட்டிக்கு சிறப்பு சலுகை நீதிமன்றம் மறுப்பு
ADDED : மே 17, 2025 11:22 PM

பெங்களூரு: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபலாபுரம் சுரங்க நிறுவனம் மூலமாக, சட்டவிரோதமாக இரும்புத்தாதுவை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தெலுங்கானாவின் சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு சிறப்பு சலுகைகள் கோரி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், 'நான் முன்னாள் அமைச்சர். வரி செலுத்துபவன். எனக்கு சிறையில் 'ஏ' பிரிவு சலுகைகள் வழங்க வேண்டும். தனியறை, தலையணை, நாளிதழ் உட்பட, தனி உணவு, பொழுதுபோக்கு வசதிகள் தேவை' என கோரியிருந்தார்.
நீதிமன்றம், அவரது வேண்டுகோளை நேற்று நிராகரித்தது. 'சலுகைகள் கட்டாயம் தேவை என்றால், உயர் நீதிமன்றத்தை நாடலாம்' என, கூறியுள்ளது.