/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மரக்கட்டை திருடியவர்களுக்கு நீதிமன்றம் நுாதன தண்டனை
/
மரக்கட்டை திருடியவர்களுக்கு நீதிமன்றம் நுாதன தண்டனை
மரக்கட்டை திருடியவர்களுக்கு நீதிமன்றம் நுாதன தண்டனை
மரக்கட்டை திருடியவர்களுக்கு நீதிமன்றம் நுாதன தண்டனை
ADDED : ஏப் 06, 2025 07:17 AM
சித்ரதுர்கா : வனப்பகுதிகளில் மரக்கட்டைகளை திருட முயற்சித்த நால்வருக்கு, சித்ரதுர்கா ஜே.எம்.எப்.சி., நீதிமன்றம் நுாதன தண்டனை வழங்கியது.
சித்ரதுர்கா மாவட்டம், மொலகால்மூர் தாலுகா முத்திகாரஹள்ளி கிராமத்தின் வனப்பகுதியில், 2016 ஏப்ரல் 14ம் தேதி, சிலர் மாட்டு வண்டியில் மரக்கட்டைகள் கடத்திச் செல்வதாக, வனத்துறையினருக்கு தகவல் வந்தது.
அங்கு சென்ற வனத்துறையினர், மாட்டு வண்டியை மடக்கிப் பிடித்தனர். அப்போது கடத்தல்காரர்கள், அதிகாரிகள் மீது மாட்டு வண்டியை ஏற்ற முயற்சித்தனர். அதன்பின் மரக்கட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து, மொலகால்மூர் போலீஸ் நிலையத்தில் வனத்துறையினர் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், வசந்த், மல்லேஷ், மல்லிகார்ஜுன், சன்ன பாலையா ஆகியோரை கைது செய்து, மொலகால்மூர் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
'விசாரணையில் நால்வரின் குற்றம் உறுதியானதால், இவர்கள் தலா 15 மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வேண்டும். தலா 4,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், 35 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' என, நீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது.