தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ரயிலில் துாங்க நேர கட்டுப்பாடு ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

ரயிலில் துாங்க நேர கட்டுப்பாடு ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

ரயிலில் துாங்க நேர கட்டுப்பாடு ரத்து செய்ய கோர்ட் மறுப்பு


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: முன்பதிவு செய்யப்பட்ட, படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில், இரவு 10: 00 மணி முதல், காலை 6:00 மணி வரை மட்டுமே துாங்க அனுமதி என்ற உத்தரவை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் எஸ்.பாலசுப்பிரமணியன். இவர் உடல் நலம் சரியில்லாத, தன் மனைவியுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில், இரவு 10:00 மணி முதல், காலை 6:00 மணி வரை மட்டுமே துாங்க அனுமதிக்கப்படுவர் என்ற உத்தரவை காரணம் காட்டி, பாலசுப்பிரமணியனின் மனைவிக்கு, படுக்கை வசதியை பயன்படுத்த, அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இது சம்பந்தமாக, 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, பாலசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில், இரவு 10:00 மணி முதல், காலை 6:00 மணி வரை மட்டுமே துாங்க அனுமதிக்கப்படுவர் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், கர்ப்பிணியர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், எந்த நேரத்திலும் துாங்க அனுமதிக்கும் விதிகள் உள்ளன.

அந்த விதி அமலில் இருக்கும் நிலையில், மனுதாரர் உதவிக்கு ரயில்வே போலீசார் அல்லது பணியில் இருக்கும் ரயில்வே ஊழியர்களை அழைத்திருக்கலாம்.

ஆனால் மனுதாரர் அவ்வாறு செய்யாமல், விதியை எதிர்த்து மனு தாக்கல் செய்து உள்ளார். மனுதாரர் ரயில்வே நிர்வாகத்தை அணுகலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us