/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் மாவட்டத்தில் பலத்த மழை மரம் வேருடன் சாய்ந்ததால் பசு பலி
/
கோலார் மாவட்டத்தில் பலத்த மழை மரம் வேருடன் சாய்ந்ததால் பசு பலி
கோலார் மாவட்டத்தில் பலத்த மழை மரம் வேருடன் சாய்ந்ததால் பசு பலி
கோலார் மாவட்டத்தில் பலத்த மழை மரம் வேருடன் சாய்ந்ததால் பசு பலி
ADDED : ஆக 10, 2025 08:38 AM

கோலார், : கோலார் மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கவயல் தங்கவயலின் ராமசாகர் கிராமத்தில் நேற்று காலையில், பெத்தண்ணா, 75, அவரது மனைவி வெங்கடம்மா, 72, ஆகியோர் ஆடுகளை மேய்க்க சென்றிருந்தனர். நேற்று மதியம் 12:15 மணியளவில் மழை பெய்ய துவங்கியது. இதனால், ஆடுகளுடன் மூங்கில் மரங்களின் அருகில் மழைக்காக ஒதுங்கினர்.
பலத்த காற்றுடன் பெய்த மழையில் மூங்கில் மரங்கள் வேருடன் சாய்ந்தது. இதன் பெத்தண்ணாவும் வெங்கடம்மாவும் சிக்கிக் கொண்டனர். இது மட்டுமின்றி 12 ஆடுகள் சிக்கின. இதுதொடர்பாக, தகவல் அறிந்த கிராம மக்கள், அவர்களையும், ஆடுகளையும் மீட்டனர். தம்பதி காயங்களுடன் உயிர் தப்பினர்.
மாலுார் கோலார் -- டேக்கல் சாலையில் மாலுாரில் நேற்று காலை பெய்த மழைக்கு 10 மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்ற இரண்டு மணி நேரம் பிடித்தது. அதன் பின்னரே, வாகனங்கள் இயங்கின.
கோலார் நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு கோலாரின் பையப்பனஹள்ளி கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று, வேருடன் சாய்ந்து, மாட்டுக் கொட்டகை மீது விழுந்தது. இதில் இருந்த ராம்ரெட்டி என்பவரின் பசு பலியானது. மேலும் நான்கு பசுக்கள் காயமடைந்தன.
மாட்டுக் கொட்டகை சின்னாபின்னமானது. கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து நேரில் வந்து பார்வையிட்டனர். நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். மொத்தம் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ராம்ரெட்டி தெரிவித்தார்.
பங்கார்பேட்டை நேற்று முன்தினம் இரவு பங்கார்பேட்டையில் தாழ்வான பகுதிகளான சேட் காம்பவுண்ட், கெங்கம்மாபாளையா ஆகிய இடங்களில் பலரின் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் துாக்கமின்றி நீரை வெளியேற்றினர். நேற்று மதியம் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பஸ் மீது விழுந்த மரக்கிளை ராபர்ட்சன்பேட்டை சுராஜ்மல் சதுக்கம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை வளாகத்தில் உள்ள அத்தி மரத்தின் பெரிய கிளை ஒன்று, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
குடமிளகாய் செடி நாசம் பேத்தமங்களா அருகே கம்மசந்திரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோரல்ல சின்னேன ஹள்ளி கிராமத்தில் 2 ஏக்கரில், சந்திரசேகர் ரெட்டி என்பவர் 5 லட்சம் ரூபாய் செலவில் குடமிளகாய் பயிரிட்டு இருந்தார். செடி வளர்ப்புக்கு போடப்பட்ட பாலிதீன் கொட்டகை மழை வெள்ளத்தால் வீழ்ந்து நாசமானது.